×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலைப் பார்த்ததும் விஜய் ஆண்டனி செய்த நெகிழ்ச்சி செயல்..!!

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். விஜயகாந்தின் இறுதி மரியாதை இன்று மாலை 4.45 மணிக்கு கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு இரவு நேரத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பேழையின் மேல் மாலை அணிவித்த விஜய் ஆண்டனி விஜயகாந்தின் முகத்தை பார்த்தபடி கண்கலங்கி நின்றார். அதன்பிறகு அவர் திடீரென்று விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பேழைக்கு முத்தமிட்டு வணங்கினார். இது பார்ப்போரை கண்கலங்க செய்தது. மேலும் அவர் அருகே நின்ற விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, 2 மகன்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சோகமாக புறப்பட்டு சென்றார்.

 

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலைப் பார்த்ததும் விஜய் ஆண்டனி செய்த நெகிழ்ச்சி செயல்..!! appeared first on Dinakaran.

Tags : Vijay Antony ,DMUDI ,Vijayakanth ,Chennai ,DMD ,DMDK ,president ,Coimbatore ,DMK ,
× RELATED மின் கட்டண உயர்வை கண்டித்து 25ம் தேதி ஆர்ப்பாட்டம்: தேமுதிக அறிவிப்பு