×

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி

 

கோவை, டிச. 29: கோவை அவினாசி ரோட்டில் உள்ள மீனாட்சி ஹால் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மற்றும் ஒன்றிய அரசு ஜவுளித்துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் சார்பில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி துவங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மத்திய மண்டலக்குழு தலைவர் மீனாலோகு, கவுன்சிலர் அன்னக்கொடி எத்திராஜ், கைத்தறி துறை உதவி இயக்குநர்கள் சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் 80 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 80 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஜவுளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதில், புதிய வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருப்புவனம் பட்டு சேலைகள், ஆரணி பட்டு சேலைகள், சிறுமுகை மென்பட்டு சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள், மதுரைசுங்கடி காட்டன் சேலைகள், சேலம் வெண்பட்டு வேஷ்டிகள், நீலகிரி தோடர் எம்பிராய்டரி சால்வைகள் மற்றும் மப்ளர்கள், சென்னிமலை போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகள், கரூர் மேட்கள் மற்றும் துண்டுகள்,

கடலூர் லுங்கிகள் தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட அரியவகை கைத்தறி ஜவுளிகள் ஒரே இடத்தில் தமிழக அரசின் 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இக்கண்காட்சி வரும் ஜனவரி 11ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. தற்போது இக்கண்காட்சியில் ரூ.3 கோடி மதிப்புள்ள கைத்தறி ஜவுளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Goa ,Tamil Nadu Government Linen Department ,Union Government Textile Development Commission ,Meenakshi Hall Hall ,Govai Avinasi Road ,level ,Dinakaran ,
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...