×

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ தினம் கொண்டாட்டம்

முத்துப்பேட்டை, டிச. 29: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் 7-வது சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு சித்த மருத்துவர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் சித்த மருத்துவத்தின் பயன்கள் மற்றும் உடல் நலத்திற்கு நலன் குறித்து எடுத்து விளக்கினர்.

இதில் பாரம்பரிய மருத்துவ பொருட்கள் சிறு, சிறு துண்டுகளாகவும் மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை வந்திருந்தவர்கள் கண்டு தெரிந்துக் கொண்டனர். சித்த மருத்துவம் பற்றிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் பாரம்பரிய உணவு பாசிப்பயறு கஞ்சி, கொண்ட கடலை, எள் உருண்டை, கடலை உருண்டைகள் வழங்கப்பட்டது. இதில் சமூக ஆர்வலர் முகம்மது மாலிக், முன்னாள் வர்த்தகக் கழக தலைவர் மெட்ரோமாலிக், புதுத்தெரு அரசு பள்ளி கனவு ஆசிரியர் செல்வ சிதம்பரம் மற்றும் சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh Day ,Government Primary Health Centre ,Muthuppet ,7th ,Siddha Medicine Day ,Siddha Medicine Department of Government Primary Health Centre ,Muthupet, Tiruvarur District ,Siddha doctor ,Priyadarshini ,Government Primary Health Center ,
× RELATED கர்ப்ப காலத்தில் உடல் மன ஆரோக்கியம்...