×

திருத்துறைப்பூண்டி பகுதியில் துணை சுகாதார நிலையத்திற்கு இடம் தேர்வு

திருத்துறைப்பூண்டி, டிச. 29: திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ராயநல்லூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி தாலுகா ராயநல்லூர், கொக்கலாடி, மேட்டுப்பாளையம், மருதவனம் உள்ளிட்ட இடங்களில தேர்வு செய்துள்ள இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தாசில்தார் கார்ல் மார்க்ஸ், துணை தாசில்தார் தங்கதுரை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டி பகுதியில் துணை சுகாதார நிலையத்திற்கு இடம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Rayanallur ,Tiruthurapoondi taluka ,District Revenue ,Thiruthaurapoondi taluka ,Kokkaladi ,Mettupalayam ,Marudavanam ,
× RELATED ஒவ்வொரு ஊராட்சியிலும் 4 நாள் மருத்துவ முகாம்