×

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி 139வது ஆண்டு துவக்க விழா

கும்பகோணம், டிச.29: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139வது ஆண்டு துவக்க விழா கும்பகோணம் காவேரி நகரில் உள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாநகர காங்கிரஸ் தலைவர் மிர்ஷாதீன் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் காங்கிரஸ் கொடியேற்றி வைத்து காங்கிரஸ் கட்சியின் கொள்கை பற்றி கருத்துரை வழங்கினார்.

நிகழ்ச்சி முடிவில் தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு மாவட்ட மற்றும் மாநகர காங்கிரஸ் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் சேகர், நெல்சன், தாராசுரம் பழனி, சாதிக், சீனுவாசன், சுந்தர்ராஜன், கார்த்திக், சரவணன், மாரியப்பன், செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி 139வது ஆண்டு துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : Congress ,Party 139th Inaugural Ceremony ,Kumbakonam ,Indian National Congress Party ,Thanjavur North District Congress ,Cauvery Nagar, Kumbakonam ,Kumbakonam Municipal Corporation ,Mayor ,Saravanan ,Municipal Congress ,President ,Mirshadeen ,Congress party ,139th ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...