×

பரதநாட்டியத்தில் உலக சாதனை பொன்-புதுப்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

பொன்னமராவதி, டிச.29: புதுக்கோட்டை மாவட்டம் பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பரத நாட்டியத்தில் உலக சாதனை படைத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அரியனூர் 1,008 சிவலிங்கம் கோயிலில் ராகஸ் நாட்டியாலயா அகாடமி ஏற்பாட்டில் நடைபெற்ற உலக சாதனை பதிவுக்கான பரத நாட்டியத்தில் ஒரே நேரத்தில் 1,008 மாணவிகள் கலந்துகொண்டு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர்.

பரதநாட்டியத்தில் பொன்னமராவதி இளந்தளிர் கலையகம் நடன ஆசிரியர் சுகன்யா சதீஸ்குமார் தலைமையிலான 27 மாணவிகள் கலந்து கொண்டு தமிழகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த நடனம், வெளிநாட்டினரை கவர்ந்திழுக்கும் நடனம் என்றால் அது பரத நாட்டியம் தான் என்பதையும் தெய்வீக கலை என்றும், பரத நாட்டியத்தை உலகமறிய செய்யும் வண்ணம் கீதாஞ்சலியுடன் தொடங்கிய பரத நாட்டியத்தில் மாணவிகள் பரதநாட்டியம் நடனமாடி உலக ரெக்கார்டு செய்து சாதனை படைத்துள்ளனர். மேலும் இச்சாதனை மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா, ஆசிரியர்கள் பள்ளி மாணவிகளை பாராட்டினர்.

The post பரதநாட்டியத்தில் உலக சாதனை பொன்-புதுப்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Pon-Pudhupatti Government School Girls ,Bharatanatyam ,Ponnamaravati ,Pudukottai District ,Pon-Pudhupatti Government Girls Higher Secondary School ,Bharata ,Bharatnatyam ,Sivalingam temple ,Arianur, Salem district ,Ragas Natyalaya Academy ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...