×

ஜெயங்கொண்டம் பகுதியில் வேளாண்மை வளர்ச்சி திட்டப் பணிகள்

ஜெயங்கொண்டம், டிச.28: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை செயல்படுத்தி வரும் திட்டப் பணிகள் குறித்து அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பாலையா ஆய்வு செய்தார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் எரவாங்குடி கிராமத்தில் தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டத்தின்கீழ் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு சாகுபடித் திடலைப் பார்வையிட்டார்.

பிரதான பயிராக முந்திரி மற்றும் ஊடுபயிராக வம்பன்-8 இரக உளுந்து பயிரிடப்பட்டுள்ள சாகுபடித் திடலைப் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடி தொழில் நுட்ப அறிவுரைகளை வழங்கினார். நுண்ணீர்ப்பாசன முறையின் நன்மைகள் குறித்தும் மகசூலை அதிகரிக்கும் தொழில் நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார். முன்னதாக வேளாண் விரிவாக்க மையத்தில் துறை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்ரமணியன், வேளாண் அலுவலர் மகேந்திரவர்மன், உதவி வேளாண் அலுவலர் கவிதா, செல்வம், அட்மா திட்ட பணியாளர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் உடனிருந்தனர்.

The post ஜெயங்கொண்டம் பகுதியில் வேளாண்மை வளர்ச்சி திட்டப் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,ARIYALUR DISTRICT ASSOCIATE DIRECTOR ,AGRICULTURE PALAIAH ,AGRICULTURE DEPARTMENT ,ARIYALUR ,DISTRICT ,Erawangudi ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...