×

பேருந்து நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் அளவீடு: வியாபாரிகள் எதிர்ப்பு

 

உசிலம்பட்டி, டிச. 29: உசிலம்பட்டியில், பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கான நில அளவீட்டு பணிகளுக்கு, அங்கு கடை அமைத்துள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேருந்து நிலையம் சேதமடைந்தது. இதனால் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக, தமிழ்நாடு அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு கூடுதல் இடம் தேவைப்பட்டதால், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஒரு ஏக்கர் நிலத்தினை வழங்கியுள்ளது.

இதையடுத்து அந்த இடங்களை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டு, நகர்மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் நேற்று பணிகள் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் காந்தி, பொறியாளர் பட்டுராஜன், நகரமைப்பு ஆய்வாளர் சாந்தா, வட்டார வளர்ச்சி அலுலர்கள் கண்ணன், தங்கவேலு, விஏஓ நர்மதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கிடையே பேருந்து நிலைய விரிவாகத்திற்கு ஊராட்சி ஒன்றியம் வழங்கியுள்ள இடத்தில் தற்போது சிலர் கடைகள் வைத்துள்ளனர். அவர்கள் தரப்பில் அளவீட்டு பணிகளை தடுத்தனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், பேருந்து நிலைய விரிவாக்கத்தில் உருவாகும் கடைகளை தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று கோரினர். இது ஏற்கப்பட்டதை தொடர்ந்து அளவீட்டு பணிகள் நடைபெற்றன.

The post பேருந்து நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் அளவீடு: வியாபாரிகள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Pasumbon Muthuramalinga ,Devar ,Usilambatti ,Dinakaran ,
× RELATED உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியூ விளக்க வாயிற் கூட்டம்