×

சுனாமி நினைவு ஸ்தூபியை புதுப்பிக்க வேண்டும் கலெக்டரிடம் மீன்பிடி தொழிற்சங்கம் வலியுறுத்தல்

நாகர்கோவில், டிச. 29: தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஜெலஸ்டின், பொதுச்செயலாளர் அந்தோணி ஆகியோர் குமரி மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அநத மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 நாளில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் பலர் இறந்தனர். கன்னியாகுமரி மாவட்ட மினவர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று கன்னியாகுமரி முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை அருகில் சுனாமி நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. சுனாமி நினைவு நாளான டிசம்பர் 26-ல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் மீனவர் சங்கங்கள், அரசியல் கட்சி, மற்றும் அமைப்புகள் சார்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்துவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாக தெரியவில்லை. இது மிகவும் வருத்ததக்கது. மேலும் இப்பேர்பட்ட நிலைமைகள் வராமல் இருக்க வேண்டுவதுடன், சுனாமி நினைவு சின்னத்தையும், பூங்காவையும், தினசரி வருகை தரும் ஆன்மிக பக்தர்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளிக்கவும் அஞ்சலி செலுத்தும் வகையில் சுகாதார வசதிகளுடன் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சுனாமி நினைவு ஸ்தூபியை புதுப்பிக்க வேண்டும் கலெக்டரிடம் மீன்பிடி தொழிற்சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Fishermen ,Tsunami ,Nagercoil ,Tamil Nadu Fishery Trade Union Federation ,President ,Zelastin ,General Secretary ,Anthony ,Kumari District Collector ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...