×

ஆசிய கோப்பை போட்டிக்காக முடிகிறது முதல் கட்ட ஐஎஸ்எல்

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு ஆண்டுக்கான 10வது தொடர் செப்.1ம் தேதி தொடங்கியது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா, முன்னாள் சாம்பியன்கள் சென்னை, பெங்களூர், ஐதராபாத் உட்பட 12 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிக்கான முதல் கட்ட ஆட்டங்கள் இன்றுடன் முடிகிறது. காரணம் இந்திய அணி கத்தாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்துப் போட்டியில் களம் காண உள்ளது. ஆசிய கோப்பை போட்டி ஜன.12ம் தேதி முதல் பிப்.10ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 24 அணிகள் விளையாட உள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி பி-பிரிவில் இடம் பெற்றுள்ளது. அப்பிரிவில் உள்ள ஆஸ்திரேலியாவுடன் ஜன.13, உஸ்பெகிஸ்தானுடன் ஜன.18, சிரியாவுடன் ஜன.23ம் தேதிகளில் இந்தியா விளையாட உள்ளது. இந்திய அணி சுற்று-16, காலிறுதி முதல் இறுதி ஆட்டம் வரை முன்னேறினால், அதற்கேற்ப ஐஎஸ்எல் போட்டியின் 2வது கட்ட ஆட்டங்கள் தள்ளி வைக்கப்படும். ஒருவேளை லீக் சுற்றுடன் வெளியேறினால், ஜன.24ம் தேதியோ, அதற்கு பிறகோ எஞ்சிய ஆட்டங்களுக்கான கால அட்டவணை அறிவிக்கப்படும். ஏற்கனவே இந்திய அணி உலக கோப்பை-2026க்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாட நவ.8ம் தேதி முதல் நவ.24ம் தேதி வரை ஐஎஸ்எல் ஆட்டங்கள் இடை நிறுத்தப்பட்டு இருந்தன.

The post ஆசிய கோப்பை போட்டிக்காக முடிகிறது முதல் கட்ட ஐஎஸ்எல் appeared first on Dinakaran.

Tags : ISL ,Asia Cup ,Mumbai ,Kolkata ,Chennai ,Bangalore ,Hyderabad ,Dinakaran ,
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கோவா-மும்பை இன்று அரையிறுதியில் மோதல்