×

நிட்டோ ஏடிபி பைனல்ஸ் ஜோகோவிச்சை வீழ்த்தினார் ஸ்வெரவ்: பைனலில் மெட்வதேவுடன் மோதல்

டுரின்: ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) மோதிய அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) கடுமையாகப் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சீசன் முடிவு தரவரிசையில் டாப் 8 வீரர்கள் மோதும் இந்த தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிந்து அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொண்ட ஸ்வெரவ் 7-6 (7-4) என்ற கணக்கில் முதல் செட்டை டை பிரேக்கரில் வென்று முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அதிரடியாக விளையாடி ஸ்வெரவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ஜோகோவிச் 6-4 என கைப்பற்ற 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஸ்வெரவ் 7-6 (7-4), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் கேஸ்பர் ரூடுடன் (நார்வே) மோதிய நடப்பு சாம்பியன் டானில் மெட்வதேவ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்வெரவ் – மெட்வதேவ் மோதுகின்றனர்….

The post நிட்டோ ஏடிபி பைனல்ஸ் ஜோகோவிச்சை வீழ்த்தினார் ஸ்வெரவ்: பைனலில் மெட்வதேவுடன் மோதல் appeared first on Dinakaran.

Tags : Nito ,Djokovic ,Zverev ,Medvedev ,Turin: ,ATP Tour Finals men ,Novak Djokovic ,ATP ,Dinakaran ,
× RELATED ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் யானிக் சின்னர் சாம்பியன்