×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி சிறப்பு சலுகை

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்து எல்ஐசி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாசிலிதாரர்களுக்கு, பிரீமிய தாமத கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இறப்பு உரிமங்களை பெற, இறப்பிற்கான எளிய ஆதாரம், இறப்புரிமைக்கான விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதும். காவல் துறை அல்லது பிரேத பரிசோதனை அறிக்கை தேவையில்லை. உங்கள் வீட்டுக்கே வந்து உதவிட 044-2861 1642, 044-2861 1912, 044-2533 1915, 044- 2533 1914 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி சிறப்பு சலுகை appeared first on Dinakaran.

Tags : Cyclone ,CHENNAI ,LIC ,Mikjam cyclone ,Tamil Nadu ,Cyclone Mikjam ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் சூறாவளி காற்று 48 மரங்கள்...