×

ஜாக்டோ-ஜியோ முற்றுகை போராட்டத்தில் 5,000 பேர் கைது

சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சென்னையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய ஆசிரியர்களை கால முறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அருகில் உள்ள சிவானந்தர் சாலையில் நேற்று காலை முற்றுகை போராட்டத்தை தொடங்கினர்.

அதனால் அந்த சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இடையே பேசினர். அப்போது அமைப்பில் உள்ள சங்கங்களின் கோரிக்கை குறித்தும் அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்தும் விளக்கம் அளித்தனர். இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசுத் தரப்பில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்று ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, வெங்கடேசன், தாஸ், சேகர், தியாகராஜன், ஆகியோர் உள்பட 30 பேர் தலைமைச் செயலகம் சென்றனர். அவர்களுடன் தலைமைச் செயலாளர் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் ெதரிவிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் முதல்வரை சந்தித்துப் பேச ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி கேட்டனர். முதல்வரை வேறு தேதியில் சந்திக்கலாம் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார். இதையடுத்து, ஜாக்டோ-ஜியோவினர் நேற்று மதியம் 2 மணி அளவில் கோட்டை நோக்கி முற்றுகையில் ஈடுபடப்போவதாக தெரிவித்து, சிவானந்தர் சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து, கைது செய்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர். முதல்வர் நேரில் அழைத்துப் பேசாவிட்டால் ஜனவரி 7ம் தேதி மீண்டும் சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

The post ஜாக்டோ-ஜியோ முற்றுகை போராட்டத்தில் 5,000 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Jakto-Jio siege ,Chennai ,Jacto-Jio ,Jacto-Jio blockade protest ,
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...