×

கிருஷ்ணகிரி அருகே ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

கிருஷ்ணகிரி : மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் கிருஷ்ணகிரி அருகே ஐயப்பன்சாமி கோவிலுக்கு மாலை அணிந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானம் கொடுத்தனர். இந்தியாவில் சில இடங்களில் மதம்சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போதுஉருவாகி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள்ஒன்றாக இணைந்து அல்லது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த அமைப்பினர் ஒன்றாக சேர்ந்து மதநல்லிணக்கத்தைஏற்படுத்தும் முயற்சியில் தாமாகவே ஈடுபட்டு வருவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மதநல்லிணக்கநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். இந்து திருவிழாவுக்கு முஸ்லிம்கள் பேனர் அடிப்பது, இந்து கோவில் நிர்வாக கமிட்டியில் முஸ்லிம்கள் பொறுப்பில் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள்தொடர்ந்து நடந்து வருகின்றனர். மேலும் முக்கிய பண்டிகைகளின்போது மதங்களை கடந்து அனைவரும்இணைந்து உணவு பகிர்ந்து உண்ணும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் இன்றுவரை நடந்து வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி நகரில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றிணைந்துஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன்படிஹிந்து, இஸ்லாமியர்கள் இடையே மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையிலும்ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும்அன்னதானம் வழங்கி வருகின்றனர். இது கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் 9ம் ஆண்டாக கிருஷ்ணகிரி நகர இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்குபூஜை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமானஅஸ்லாம் தலைமையில் கிருஷ்ணகிரி அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில்நடந்த சிறப்பு பஜனை வழிபாட்டின்போது பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் மாலை அணிந்து பஜனையில் பங்கேற்ற ஐயப்பன் பக்தர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தையும் ஹிந்துமுஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சியில்ரியாஸ், அஷ்ரப், ஜாபர், ஜெலில், முனீர், சுபேர் உள்ளிட்ட இஸ்லாமிய இளைஞர்கள் உட்படஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணகிரி அருகே ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள் appeared first on Dinakaran.

Tags : Islamists ,Ayyappa ,Krishnagiri ,Ayyappansami temple ,India ,
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...