×

விஜயகாந்த் மறைவையொட்டி குலதெய்வ கோயிலில் நடையடைப்பு

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் குலதெய்வமான வீரம்மாள் கோயில் உள்ளது. புதுப்படபிடிப்பு மற்றும் திரைப்படம் வெளியாகும் முன்பு இக்கோயிலுக்கு விஜயகாந்த் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். அரசியல் கட்சி துவங்கிய பின், வேட்பாளர் பட்டியலையும் குலதெய்வம் முன்பு வைத்து வழிபாடு செய்துவிட்டு வேட்பாளர்களை அறிவித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து சென்றார். அதன்பின் உடல்நல குறைவால் கடந்த 3 மாதத்திற்கு முன் நடந்த கும்பாபிஷேகத்திற்கு கூட வரவில்லை.

அவரது மனைவி பிரேமலதா மட்டுமே கலந்து கொண்டார். விஜயகாந்த்-பிரேமலதா முயற்சியால் கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், விஜயகாந்த் இன்று காலமானதால் காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் நடை அடைக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கேயநத்தம் மற்றும் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள கிராமங்களில் அரைக்கம்பத்தில் கட்சிகொடி பறக்கவிடப்பட்டுள்ளது. கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

The post விஜயகாந்த் மறைவையொட்டி குலதெய்வ கோயிலில் நடையடைப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Kulatheiva Temple ,Tirumangalam ,Kangeyanatham ,Tirumangalam, Madurai district ,Veerammal ,
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!