×

விஜயகாந்த் மறைவு: திரையுலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிக் கலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என தலையெடுத்தவர் விஜயகாந்த்: நடிகர்.டி.ராஜேந்தர் புகழாரம்

சென்னை: விஜயகாந்த் மறைவிற்கு நடிகர்.டி.ராஜேந்தர், அமமுக தலைவர் சசிகலா, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 26ம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதயத்தை ஈட்டி போல் தாக்கியது: டி.ராஜேந்தர்

தனக்கென்று ஒரு தனி பெயரை ஈட்டிய நண்பர் விஜயகாந்த் மறைவுச் செய்தி எனது இதயத்தை ஈட்டி போல் தாக்கியது என நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். திரையுலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிக் கலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என தலையெடுத்தவர் விஜயகாந்த். நடிகர் சங்க தலைவராய் பதவி வகித்து, தேமுதிக தலைவராய் உருவெடுத்து, எதிர்க்கட்சி தலைவராய் கால் பதித்தவர்.

பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்: நிர்மலா சீதாராமன்

பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல் விஜயகாந்த் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைவு யாராலும் ஈடு செய்ய இயலாதது: சசிகலா

சகோதரர் விஜயகாந்த் அவர்களின் மறைவு யாராலும் ஈடு செய்ய இயலாதது என அமமுக தலைவர் சசிகலா தெரிவித்துள்ளார். அன்பு சகோதரர் விஜயகாந்த் தனது கடின உழைப்பால், ஒரு நடிகராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர். எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் ஆற்றிய மக்கள் நலப் பணிகள், சமூகப் பணிகளை மக்கள் என்றும் நினைவில் கொள்வர். எம்ஜிஆர், ஜெயலலிதா மீது விஜயகாந்த் அளவற்ற அன்பு, மிகுந்த மரியாதை கொண்டு இருந்ததை எண்ணிப் பார்க்கிறேன்.

The post விஜயகாந்த் மறைவு: திரையுலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிக் கலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என தலையெடுத்தவர் விஜயகாந்த்: நடிகர்.டி.ராஜேந்தர் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,D. Rajender ,CHENNAI ,AAMK ,Sasikala ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,DMK ,Myatt Hospital ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...