×

உங்கள் இரக்கம், தைரியம், தலைமை, மனிதத் தன்மையால் என்றும் நினைவுகூரப்படுவீர்கள்: விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர், தலைவர்கள் அஞ்சலி..!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்த் காலமானார். திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்த் மறைவால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர், தலைவர்கள் அஞ்சலி:

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதராகவே அவரை உலகிற்கு அடையாளப்படுத்தியது.

எல்.முருகன்: அரசியலில் பெரும் ஆளுமையான விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி மனவேதனை அளிக்கிறது.

கே.எஸ்.அழகிரி: அரசியலில் கால் பதித்து பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு கருவியாகத் திகழ்ந்தவர்.

கனிமொழி எம்பி: எளிமை குறையாத மனிதராக மக்கள் நலனுக்காக பொதுவாழ்வில் துணிச்சலாக செயலாற்றியவர். கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்தவர் விஜயகாந்த். விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமின்றி எனக்கும் பேரிழப்பாகும்.

வைகோ: சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவு பொதுவாழ்விற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

ஓபிஎஸ்: விஜயகாந்த் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது; இவரது இழப்பு மக்களுக்கு பேரிழப்பாகும்.

தமிமுன் அன்சாரி: கட்சி அரசியலை கடந்து விஜயகாந்த் மரணம் சோக அலையை உருவாக்கியிருக்கிறது.

ஜி.ராமகிருஷ்ணன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு அதிர்ச்சியும், மிகுந்த சுவருத்தமும் அளிக்கிறது.

பொன்.ராதாகிருஷ்ணன்: ஒரு சிறந்த தலைவர் நம்மை விட்டு பிரிந்துள்ளார் என்பது பேரிழப்பு.

இயக்குநர் மாரி செல்வராஜ்: அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன் விஜயகாந்த்.

ஆர்.ஜே.பாலாஜி: உங்கள் இரக்கம், தைரியம், தலைமை, மனிதத் தன்மையால் என்றும் நினைவுகூரப்படுவீர்கள்.

இரா.முத்தரசன்: தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிய பண்பாளர்; மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்: உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவில்லை. அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை இனி எப்போது காண்போம் கேப்டன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை த்ரிஷா: கேப்டன் உங்கள் இரக்க குணத்தை நான் எப்போதும் நினைவுகூர்வேன்.

டி.ராஜேந்தர்: அருமை நண்பர் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி இதயத்தை ஈட்டி போல் தாக்கியது. திரையுலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிக் கலைஞராய் பெயரெடுத்தவர் விஜயகாந்த்

ஆளுநர் ரவி: சினிமா, அரசியல் சமூக சேவையில் விஜயகாந்தின் அளப்பரிய பங்களிப்பு நினைவுகூரப்படும். சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவருமான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது. எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன.

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்: விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

நிர்மலா சீதாராமன்: விஜயகாந்த் அவர்களை பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல் என அஞ்சலி செலுத்துவோம். விஜயகாந்தை இழந்துவாடும் அவரது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post உங்கள் இரக்கம், தைரியம், தலைமை, மனிதத் தன்மையால் என்றும் நினைவுகூரப்படுவீர்கள்: விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர், தலைவர்கள் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது