×

சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு போலி விதை விற்றோரை கைது செய்ய வேண்டும் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி.டிச.28: திருச்சி மாவட்டத்தில் சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு போலி விதை நெல் விற்றோரை கைது செய்ய வேண்டும் என்று குறைதீர் நாள் கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம், அந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் அம்மன் பொன்னி ரகம் என்ற போலியான விதையை விவசாயிகளுக்கு தனியார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஏக்கருக்கு 10 கிலோ விதைநெல் தௌித்த நிலையில், 120 நாள் கதிர் விட வேண்டிய நெற்பயிரானது நாற்று பிடுங்கி நட்ட 10 நாளில் கதிர் விட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையும், அதனை விற்பனை செய்த வியாபாரிகளை கைது செய்யவும் வேண்டும். மேலும் இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் அந்நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து கையில் நெற்கதிருடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி, உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விவசாயிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பை நிறுவனத்திடம் இருந்து பெற்று தர வேண்டும். மேலும் புதுக்கோட்டை பகுதிகளில் காலாவதியான ரசாயன பூச்சி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி அதனை விற்பனை செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு போலி விதை விற்றோரை கைது செய்ய வேண்டும் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Grievance Day ,samba ,Tiruchi.Dec ,Tiruchi district ,Dinakaran ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை