×

ராமசமுத்திரத்தில் துவங்கும் வடகரை வாய்க்கால் தலைப்பை உறையூர் காசி விலங்கி மீன் மார்க்கெட்டில் கழிவுகளை உரிய இடத்தில் கொட்ட வேண்டும்

திருச்சி.டிச.28:உறையூர் காசி விலங்கி மீன் மார்க்கெட்டில், கழிவுகளை உரிய இடத்தில் கொட்ட வேண்டும் என்று மேயர் எச்சரிக்கை விடுத்தார். திருச்சி மாநகராட்சி உறையூர் காசி விலங்கி மீன் மார்கெட்டில் மேயா் அன்பழகன் சுகாதார பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பொது மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில் மீன் கழிவுகளை சாலை மற்றும் ஆற்றங்கரை வெளிப்பகுதியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களில் இருந்து அகற்றப்படும் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, கழிவுநீா்கள் தேங்கி நிற்பதையும் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்.

மேலும், மீன் மார்கெட்டை தினமும் தூய்மை செய்ய வேண்டும் என்றும், அதோடு மாநகராட்சி அனுமதி வழங்கி வரையறை செய்யப்பட்டுள்ள எல்லைக்குள் மீன் கடைகள் செயல்பட வேண்டும், வெளிப்புறங்களில் மீன் கடைகள் போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கடைகாரா்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்,சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர்.

The post ராமசமுத்திரத்தில் துவங்கும் வடகரை வாய்க்கால் தலைப்பை உறையூர் காசி விலங்கி மீன் மார்க்கெட்டில் கழிவுகளை உரிய இடத்தில் கொட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ramasamutra ,Varayur Kashi Wildlife Fish Market ,Mayor ,Uraiyur Kasi ,Ramasamudra ,Varayur Kashi ,Dinakaran ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!