×

₹9.21 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்

கெங்கவல்லி, டிச. 28: கெங்கவல்லி அருகே, ஒதியத்தூர் பகுதியில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளத்தை கொண்டு வந்து குவித்தனர். குவிண்டால் ₹2200 முதல் ₹2270 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் 480 மூட்டை மக்காச்சோளம் ₹9,21,831 லட்சத்திற்கு விற்பனையானதாக மேற்பார்வையாளர் மணியரசன் தெரிவித்தார்.

The post ₹9.21 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Odiyathur ,Dinakaran ,
× RELATED ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை