×

பொது மக்களை காயப்படுத்தும் தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது: ராணுவத்தினருக்கு ராஜ்நாத் அறிவுரை

ரஜோரி: பொது மக்களை காயப்படுத்தும் தவறுகள் மீண்டும் ஏற்படக்கூடாது என ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக ராணுவத்தினர் கூட்டி சென்ற 3 பேர் உயிரிழந்தது காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஜோரிக்கு நேற்று வந்தார்.

அங்கு ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் நாத் கலந்துரையாடுகையில்,‘‘ நீங்கள் நாட்டின் காவலர்கள். நாட்டின் பாதுகாப்புக்கான பொறுப்பைத் தவிர, பொதுமக்களின் இதயங்களை வெல்வதும் உங்களது ஒரு பெரிய பொறுப்பாகும்.
சில நேரங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. மக்களை காயப்படுத்தக்கூடிய இதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது,” என்றார். விசாரணைக்கு சென்று பலியானவர்களின் குடும்பத்தினரை அமைச்சர் சந்தித்து பேசினார். பின்னர் ரஜோரி அரசு மருத்துவமனைக்கு சென்று ராணுவ வீரர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 4 பேரை சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதற்கிடையே, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தானின் எல்லையில் உள்ள சம்பா மற்றும் பூஞ்ச் பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொது மக்களை காயப்படுத்தும் தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது: ராணுவத்தினருக்கு ராஜ்நாத் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Rajnath ,Rajouri ,Defense Minister ,Rajnath Singh ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்