×

அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல எம்பில் படிப்பில் சேராதீர்கள்: யுஜிசி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘எம்பில் படிப்புகள் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல. எனவே அதில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம்’ என பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் மணீஷ் ஜோடி கூறுகையில், ‘‘எம்பில் (முதுகலை தத்துவம்) படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு சில பல்கலைக்கழகங்கள் புதிதாக விண்ணப்பங்களை வழங்குவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல. யுஜிசியின் ஒழுங்குமுறை எண் 14 (பிஎச்டி பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடைமுறைகள்) விதிமுறை 2022ல், உயர்கல்வி நிறுவனங்கள் எம்பில் பட்டத்தை வழங்கக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 2023-24 கல்வியாண்டுக்கான எம்பில் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களை கேட்டுக் கொள்கிறோம். எந்த ஒரு எம்பில் படிப்புகளிலும் மாணவர்கள் சேர வேண்டாம்’’ என அறிவுறுத்தி உள்ளார். அதே சமயம், பிஎச்டி விதிமுறைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக எம்பில் பட்டம் பெற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல எம்பில் படிப்பில் சேராதீர்கள்: யுஜிசி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : UGC ,New Delhi ,UGC warning ,Dinakaran ,
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...