×

மனைவி பிரிவு கணவர் சாவு

சிவகாசி, டிச.28: மனைவி பிரிந்து சென்றதால் பட்டாசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி அருகே சல்வார்பட்டியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி தேன்ராஜ்(36). தேன்ராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி ராஜலட்சுமி அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த தேன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மனைவி பிரிவு கணவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Salwarpatti ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை