×

உபா சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக் அமைப்புக்கு தடை விதிப்பு: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக் (மஸரத் ஆலம் பிரிவு) அமைப்பு தேச விரோத செயலில் ஈடுபடுவதாலும், தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு தந்ததாலும் உபா சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக் (மஸரத் ஆலம் பிரிவு) கட்சி, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் அதன் உறுப்பினர்களும் காஷ்மீரில் தேச துரோக செயல்களில் ஈடுபட்டதோடு, தீவிரவாத செயல்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ மக்களை தூண்டி உள்ளனர். இதன் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிராக எந்த செயல்களையும் அரசு அனுமதிக்காது என்பதை உரக்கவும், உறுதியாகவும் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற செயல்களுக்கு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

The post உபா சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக் அமைப்புக்கு தடை விதிப்பு: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir Muslim League Organization ,New Delhi ,Jammu Kashmir Muslim League ,Masarat Alam Unit ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு