×

மழைசேத பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம், டிச.28:திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள சிறு வண்டல், நத்தக் கோட்டை, கூடலூர், சுத்தமல்லி ,திருத்தேர்வளை, கருங்குடி, கூடலூர், பச்சனத்தி கோட்டை, ஆனந்தூர் காவனக்கோட்டை, கொக்கூரணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் விளைந்த நெல் பயிர்கள் சேதம் அடைந்தன.

இந்நிலையில், வயல்களில் விளைந்த நிலையில் பாதிப்படைந்துள்ள நெற்பயிர்களை எம்.எல்.ஏ கருமாணிக்கம் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக சிறுவண்டல், நத்தக்கோட்டை, சுத்தமல்லி, கருங்குடி, திருத்தேர்வளை, பச்சனத்திக் கோட்டை, ஆனந்தூர், கொக்கூரணி உள்ளிட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாசில்தார் சுவாமிநாதன், வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, யூனியன் சேர்மன் ராதிகா பிரபு, வைஸ் சேர்மன் சேகர்,காங்கிரஸ் வட்டார தலைவர் சுப்பிரமணியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் காந்தி, தீனதயாளன்,உட்பட அரசு அதிகாரிகளும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மழைசேத பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MLA ,RS Mangalam ,Nattak Fort ,Kudalur ,Sudtamalli ,Thirutherwala ,Dinakaran ,
× RELATED சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்