×

மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது: பெருந்துறை அருகே பரபரப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுல்லிப்பாளையம் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் திருமலை மூர்த்தி (49). இவர், பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 உயிரியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருமலை மூர்த்தி பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், மாணவிகளை தொட்டு பேசுவதும், ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை நடனமாடச் சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். இதில், ஆசிரியர் அத்துமீறல் குறித்து மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஞானசேகரன், ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆசிரியர் திருமலை மூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்குப்பின் நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோபி மாவட்ட சிறையில் ஆசிரியர் திருமலை மூர்த்தி அடைக்கப்பட்டார்….

The post மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது: பெருந்துறை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Perundurai Erode ,Thirumalai Murthy ,Perundurai ,Sullipalayam Co ,Erode district ,
× RELATED கஞ்சா விற்ற 3 பேர் கைது