×

திருவாதிரையை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆருத்ரா தரிசனம்

தஞ்சாவூர், டிச.28: தஞ்சாவூர் பெரிய கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நேற்று ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான், தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆண்டுதோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடந்து வருகிறது. அதேபோல் இந்தாண்டும் நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஐம்பொன்னாலான நடராஜபெருமானுக்கு நேற்று மாலை மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, நேற்று (27ம் தேதி) காலை சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்திரியுடன், நடராஜ பெருமான் எழுந்தருளி கோயிலில் வலம் வந்து நான்கு ராஜவீதிகளில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பரதநாட்டிய கலைஞர்களின் சிறப்பு பரதநாட்டியம் நடந்தது. விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, பரம்பரை அறங்காவலர் பாபாஜி பான்ஸ்லே, செயலாளர் ரங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாதிரையை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆருத்ரா தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Periyakoil ,Thanjavur ,Tiruvadhirai ,Arudra darshan ,Thanjavur Periya Koil ,
× RELATED தஞ்சாவூர் பெரியகோயிலில் 20ம் தேதி...