×

கோட்டை சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா

அறந்தாங்கி,டிச.28: அறந்தாங்கி கோட்டை சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று கோட்டை சிவன் கோயிலில் நடராஜருக்கு 16 வகையான பொருள்கள் கொண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் சிவன் கோயிலில் உள்ள 4 வீதியிலும் பெரிய தெருவில் உள்ள 4 வீதியிலும் நடராஜர் வீதி உலா வந்து அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post கோட்டை சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா appeared first on Dinakaran.

Tags : Arudra Darshan Ceremony ,Fort Shiva Temple ,Arantangi ,Arantangi Fort Shiva Temple ,
× RELATED அறந்தாங்கியில் வெறிநாய் கடித்து 2 பேர் படுகாயம்