×

அயோத்திக்கு மோடி பயணம் நேபாள எல்லையில் கண்காணிப்பு

மகாராஜ்கஞ்ச்: அயோத்தியில் அடுத்த மாதம் 22ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையம் வரும் 30ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மோடி அயோத்திக்கு வருவதை முன்னிட்டு நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் சாலைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் எல்லை பாதுகாப்பு படையினர்(எஸ்எஸ்பி) இந்தியா- நேபாள எல்லைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து எஸ்எஸ்பி டிஐஜி அகிலேஷ்வர் சிங் கூறுகையில்,‘‘ நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். எல்லையில் உள்ள பாதுகாப்பு படை நிலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மகாராஜ்கஞ்ச், சித்தார்த்நகர், ஷ்ராவஸ்தி, பலராம்பூர் போன்ற எல்லை மாவட்டங்களில் உச்சபட்ச தயார் நிலையில் இருக்கும்படி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

The post அயோத்திக்கு மோடி பயணம் நேபாள எல்லையில் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Ayodhya ,Maharajganj ,Ram temple ,Kumbabhishekam ,Dinakaran ,
× RELATED அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம்