×

பேரிடரை பார்க்க வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பழைய செலவு கணக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்: திருநாவுக்கரசர் எம்பி தாக்கு

புதுக்கோட்டை: பேரிடரை பார்க்க வந்த நிதியமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் பழைய செலவு கணக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என திருநாவுக்கரசர் எம்பி குற்றச்சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: புயல், பெருமழை, வெள்ளம் ஏற்படும்போது ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்துதான் மக்களை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தருவதில் ஒன்றிய அரசுக்கு, தேசிய பேரிடராக அறிவிப்பதில் என்ன சிக்கல் என தெரியவில்லை. தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டால் பக்கத்து மாநிலங்களின் நிதியையும் பெற முடியும். வரிச்சலுகை பெற முடியும். அதனால் கூடுதல் நிதி கிடைக்கும். மக்களை மீட்டெடுக்க முடியும். பேரிடரை பார்க்க வந்த ஒன்றிய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஏதாவது நிதி வழங்கலாம்.

அதைவிடுத்து பழைய செலவு கணக்கை பார்த்து கொண்டிருக்கிறார். மீண்டும் வெற்றிபெற்று வந்த பிறகு அந்த கணக்கை பார்க்கலாம். இப்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள். உண்மையில் ஊழலை ஒழிப்பதற்காகத்தான் வழக்குகள் போடப்படுகின்றன என்றால், ஏன் பாஜ ஆளும் மாநில அமைச்சர்கள், பாஜ கூட்டணி அமைச்சர்கள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு விரும்புபவர்கள் யார் வேண்டுமானாலும் போகலாம். ஆன்மிக சுற்றுலா செல்வோர் கூட வேளாங்கண்ணி, நாகூர், சுப்பிரமணியர் கோயிலுக்கும் செல்வார்கள். எனவே, விருப்பமுள்ளோர் போகலாம். காங்கிரசுக்கு எந்த தடையும் இல்லை. வேங்கைவயல் வழக்கை போலீசார் விரைவில் நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பேரிடரை பார்க்க வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பழைய செலவு கணக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்: திருநாவுக்கரசர் எம்பி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Thirunavukkarasar ,Thaku ,Pudukottai ,Thakku ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...