×

ஊட்டி- கோத்தகிரி செல்லும் சாலையில் பிரஷ் காய்கறிகள் விற்பனை: ஆர்வத்துடன் வாங்கும் சுற்றுலா பயணிகள்


ஊட்டி: ஊட்டி- கோத்தகிரி சாலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், சாலையோரங்களில் காய்கறி விற்பனையும் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் மற்றும் கீரை வகைகளும் விளைவிக்கப்படுகிறது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், சைனீஸ், கேபேஜ் போன்றவைகளை சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்வது வழக்கம். இதை சுற்றுலா பயணிகள் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்.

இரு மாதங்களுக்கு பின் தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழி முழுவதிலும் விவசாயிகள் மலை காய்கறிகள் மற்றும் சைனீஷ் வகை காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், சைனீஸ் காய்கறிகள் மற்றும் பல்வேறு வகையான கீரை வகைகள் தங்களது தோட்டங்களில் இருந்து பறித்து கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் பெரும்பாலானவர்கள் இந்த காய்கறிகளை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது போன்று சாலையோரங்களில் காய்கறிகளை விற்பனை செய்பவர்களில் பலர் சிறு விவசாயிகள், தங்கள் வீட்டின் அருகில் உள்ள சிறிய இடங்களில் காய்கறிகளை பயிரிட்டு அதனை சாலையோரங்களில் கடைகள் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனை சுற்றுலா பயணிகள் பலர் வாங்கிச் செல்வதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.

The post ஊட்டி- கோத்தகிரி செல்லும் சாலையில் பிரஷ் காய்கறிகள் விற்பனை: ஆர்வத்துடன் வாங்கும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty-Kotagiri road ,Ooty ,Nilgiris ,Ooty-Kothagiri ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்