×

திருப்புத்தூரில் பழுது பார்த்தபோது அறுந்து விழுந்த ‘ஹைமாஸ்’ விளக்கு: அதிர்ஷ்டவசமாக பேரூராட்சி பணியாளர்கள் தப்பினர்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அண்ணா சிலை அருகே, பழுது பார்த்தபோது, ஹைமாஸ் விளக்கு அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஹைமாஸ் விளக்கு கம்பத்தின் கீழே பணிபுரிந்த பேரூராட்சி பணியாளர்கள் தப்பினர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் அண்ணா சிலை அருகே, 10 ஆண்டுகளுக்கு முன் உயர்கோபுர மின்விளக்கு (ஹைமாஸ் லைட்) கம்பம் அமைக்கப்பட்டது. இதில், மின்விளக்குகள் சரியாக எரியாததால், அப்பகுதியில் இருள் சூழ்ந்தது. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

இதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் பழுதான ஹைமாஸ் விளக்குகளை நேற்று பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோபுரத்தில் விளக்குகளை தாங்கி நிற்கும் கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. இதைப் பார்த்து கம்பத்தின் கீழே பணிபுரிந்த தொழிலாளர்கள் சிதறி ஓடினர். இதில், கஜேந்திரன் என்னும் தொழிலாளிக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, அடிக்கடி ஹைமாஸ் விளக்கை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்வை விடுத்தனர்.

The post திருப்புத்தூரில் பழுது பார்த்தபோது அறுந்து விழுந்த ‘ஹைமாஸ்’ விளக்கு: அதிர்ஷ்டவசமாக பேரூராட்சி பணியாளர்கள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Haimas ,Tiruputhur ,Anna ,Hymas ,Haimas… ,
× RELATED கஞ்சா கடத்திய வாலிபர் கைது