×

கர்நாடகா முதல்வரை விமர்சித்த பாஜக எம்பி மீது வழக்கு


மைசூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி பிரதாப் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் மைசூர் குடகு தொகுதி பாஜக எம்பி பிரதாத் சிங், ஹுன்சூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில முதல்வருமான சித்தராமையாவுக்கு எதிராக தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்தார். அதையடுத்து பிரதாப் சிங்காவின் அலுவலகம் முன் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக எம்பி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி, டயர்களுக்கு தீ வைத்து எரித்தனர்.

சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பிரதாப் சிங்குக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்வதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர். இந்நிலையில் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகி பி.ஜே.விஜயகுமார் என்பவர் அளித்த எழுத்துப்பூர்வமாக புகாரின் அடிப்படையில், இரு சமூகங்களுக்கு இடையே வகுப்புவாத கலவரத்தை தூண்டுவகையில் பேசியதாகவும், முதல்வர் குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக கூறி, தேவராஜ் காவல் நிலைய போலீசார் எம்பி பிரதாப் சிங் மீது ஐபிசி 504, 153 ஆகிய பிரிவின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

The post கர்நாடகா முதல்வரை விமர்சித்த பாஜக எம்பி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,Chief Minister ,Mysore ,Pratap Singh ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...