×

ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த தென்கொரிய நடிகர் மர்ம மரணம்: காருக்குள் சடலமாக மீட்பு

சியோல்: ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த தென்கொரிய நடிகர் லீ சன்-கியூன், மர்மமான முறையில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற ‘பாராசைட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தென்கொரியா நடிகர் லீ சன்-கியூன் (47), சியோலில் அமைந்துள்ள பூங்கா வளாகத்தில் காரில் இருந்தபடி மயக்கநிலையில் கிடந்தார். அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது லீ சன்-கியூன் காரில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘காருக்குள் இறந்து கிடந்த லீ சன்-கியூன், அதிகளவு போதை பொருள் உட்கொண்டுள்ளார். அவரது காருக்குள் தற்கொலை குறிப்பு கடிதம் ஒன்று இருந்தது. மரணத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

The post ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த தென்கொரிய நடிகர் மர்ம மரணம்: காருக்குள் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Seoul ,Lee Sun-kyun ,
× RELATED வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை