×

கனமழைக்கு சரிந்து கிடந்த வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலமான ரஞ்சன்குடி ேகாட்டை கொத்தளம் சீரமைப்பு

*இந்திய தொல்லியல்துறை நடவடிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலம். நில நடுக்கத்திற்கே சரியாத ரஞ்சன்குடி கோட்டையின் கொத்தளம். கன மழைக்கு சரிந்து கிடந்ததை இந்திய தொல்லியல்துறை சீரமைத்தது.பெரம்பலூர் மாவட்டத்திற்கு புவியியல் ரீதியாக பெருமை சேர்ப்பது 12கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த சாத்தனூர் கல் மரம் என்றால், வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்ப்பது ரஞ்சன்குடி கோட்டையாகும்.

பெரம்பலூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 18 கிலோ மீட்டர் தூரத்தில், மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் அமைந்துள்ள இந்தக் கோட்டை, கிபி 16ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. ஒரு குன்றை சுற்றிலும் எழுப்பப்பட்டிருக் கும் இந்த கோட்டைக்கான கட்டுமானப் பணி, நவாப்பு களின் கட்டுப்பாட்டிலிருந்த தூங்கானை மறவன் என்ற குறுநில மன்னரால் தொடங்கப்பட்டது. ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, துருவத்துக்கோட்டை என பலபெயர்களில் அழைக்கப் படும் இந்தக் கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமாகும்.

சந்தா சாஹிப்- பிரெஞ்சு கூட்டுப் படைக்கும், முகமது அலி-ஆங்கிலேய கூட்டுப் படைக்கும் இடையே 1751ம் ஆண்டுநடந்த வால்கொண்டா போர், ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்தாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. இன்றளவும் இக்கோட்டையைச் சுற்றி பிரமாண்ட அகழிகள், கோட்டைக்கு உள்ளே விதான மண்டபம், பீரங்கி மேடை, கொடிமேடை, தண்டனைக் கிணறு, வெடி மருந்துக் கிடங்கு, புறவழிச் சுரங்கப் பாதை, பிற்கால பாண்டியர் ஆட்சியில், முகமதியர் ஆட்சியில் கட்டப்பட்ட மண்டபங்கள், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்காதபடி இருப்பதற்கோ, துப்பாக்கிகளால் குறி பார்க்கவோ, கீழ்நோக்கி துளைகள் இடப்பட்ட சுற்றுச் சுவர்கள், குதிரைலாயம் ஆகியன சாட்சிகளாக உள்ளன.

இந்தக்கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின்- சென்னை மண்டல கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது. நிலநடுக்கத்தால் கூட பாதிப்படையாத இந்தக் கொட்டையின் கொத்தளம் கடந்த 2021 டிசம்பர்மாதம் பெய்த கனமழைக்குச் சரிந் தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ரஞ்சன்குடிக் கோட்டையின் அந்தகாலத்து கண்காணி ப்பு கோபுரமாக விளங்கிய கொத்தளத்தின் பக்கசுவர் எதிர்பாராத நிலையில் சரிந்துவிட்டது. இதனை பெரம்பலூர் எம்எல்ஏ பிர பாகரன் நேரில் பார்வை யிட்டு ஆய்வுசெய்து சீரமை ப்புப் பணிகளை மேற்கொ ள்ள பரிந்துரைத்திருந்தார். அதே போல் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்டதலைவர் சுல்தான் மொய்தீன் என்பவர் தமது கட்சியின் சார்பாக கலெக் டருக்கும், தொல்லியல் துறைக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந் தியத் தொல்லியல் துறை யின்,சென்னை வட்ட (செயின்ட் ஜார்ஜ் கோட்டை) கண்காணிப்பாளர் உத்தர வின் பேரில், பாண்டிச்சேரி துணை வட்ட பராமரிப்பு உதவியாளர் மேற்பார்வை யில், கொடிமேடை அமைந் துள்ள கொத்தளம் 8மீட்டர் நீளத்திற்கு சீரமைப்பு பணி கடந்த மாதமே தொடங்கி யுள்ளது. இதற்காக இரும் புக் குழாய்களால் கோட்டை யின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் சாரம் அமைத்து, கீழேயிருந்து கான்கிரீட் கலவையை இரும்பு ரோப்புகளால் 80 அடி உயரத்திற்கு மேலே டீசல் என்ஜின் மூலமாகக் கொண்டுசென்று சீரமை ப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்துவந்து, தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. புதி தாக சீரமைக்கப்பட்ட கொத்தளத்தின் சுற்றுச் சுவர் அதன் பழங்கால கம்பீரம் குறையாமல் தொல்லியத் துறையின ரால் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டையின் முன்புற தரைத்தளத்தில் கடந்த ஓராண்டில் சுதந்திரதினம், குடியரசு தினங்களில் தேசியக்கோடியேற்ற 50அடி உயரத்திற்கு அமைக் கப்பட்டுள்ள பிரமாண்ட இரும்புகொடிமரம், கோட் டை செல்லும் வழிகளில் குரோட்டன்ஸ் செடிகள் அமைத்து, தரையில் சுற் றுலா பயணிகள் சுற்றத்தா ருடன் அமர்ந்து பேசி சிற்று ண்டிகளை அருந்தி செல்ல ஏதுவாக புற்கள் வெட்டப் பட்டு பளிச்செனத் தெரியும் பசுந்தரை பார்வையாளர்க ளை ஈர்க்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. தொல்லியல் துறை தற்போது மேற்கொ ள்ளும் பராமரிப்புப் பணிக ளால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது என தற்போதைய கோட்டை பாதுகாவலர் முரளி தெரிவித்துள்ளார்.

The post கனமழைக்கு சரிந்து கிடந்த வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலமான ரஞ்சன்குடி ேகாட்டை கொத்தளம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Ranjankudi Yegat ,Archaeology Department of India ,Perambalur ,Ranjangudi fort ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...