×

ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் பயணிகளை காக்க நடவடிக்கை சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை

ஊட்டி : ஊட்டி அருகே பைன் பாரஸ்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நிலையில் அங்கு பாதுகாப்பு அதிகரிப்பது அவசியம் என கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பெரும்பாலானவர்கள் ஊட்டி அரசு தாவரவியல், படகு இல்லம், தொட்டபெட்டா, ரோஜா பூங்கா உட்பட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர்.

இது மட்டும் இன்றி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பல இயற்கை அழகை காண்பதற்காக அணைகள் மற்றும் வனப்பகுதிகளுக்குள் செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், வனத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை வனத்துறையினர் சூழல் மேம்பாட்டு குளம் மூலம் சுற்றுலா பகுதிகளாக மேம்படுத்தி அங்கு சுற்றுலா பயணிகளைச் செல்ல அனுமதிக்கின்றனர்.

இது போன்ற சுற்றுலா தளம் தான் ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதியாகும். இந்த பைன் பாரஸ்ட் பகுதி ஊட்டி காமராஜ் சாகர் அணையை ஒட்டி உள்ளது. எனவே, கேரள மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பகுதிகள் ஊட்டி நகருக்குள் நுழையும் முன் இந்த பைன் பாரஸ்ட் சுற்றுலா தளத்திற்கு சென்று அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர்.

பைன் பாரஸ்ட் பகுதி காமராஜ் சாகர் அணை ஒட்டி உள்ள நிலையில் சில சமயங்களில் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, அணையை ஒட்டி கரைப்பகுதியில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது அவசியமாக உள்ளது. வனத்துறையினர் இப்பகுதியில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளது அவசியம் மட்டுமின்றி அணை ஒட்டி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபடுவதும் அவசியமான சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் பயணிகளை காக்க நடவடிக்கை சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ooty Pine Forest ,Ooty ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...