×

தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் ஒருவர் பலி: டிடிவி தினகரன் இரங்கல்

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் பெருமாள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பெருமாள் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதோடு, இது போன்ற ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் ஒருவர் பலி: டிடிவி தினகரன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : COMPANY ,DANDAYARPET ,DTV DINAKARAN ,Chennai ,DTV ,Dinakaran ,Indian Oil Company ,Dandiyarpetta, Chennai ,Dandiyarpetta ,
× RELATED திருப்பூரில் பனியன் கம்பெனியை...