×

தொலைநோக்கு கருவி மூலம் தொட்டபெட்டாவில் இயற்கை அழகை காண குவியும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி : தொட்டபெட்டாவில் தொலைநோக்கி மூலம் இயற்கை அழகை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்கின்றனர். குறிப்பாக, வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளே இங்கு அதிகம் செல்வது வழக்கம்.

இந்நிலையில், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு மலை உச்சியில் வைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் இயற்கை அழகை கண்டு ரசித்து செல்வது வழக்கம். தற்போது தொடர் விடுமுறை என்பதால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தொட்டபெட்டாவிற்கு செல்கின்றனர். அங்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அங்குள்ள பய்னோகுளோர் அறைக்கு சென்று தொலைநோக்கி மூலம் இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர்.

தொலைநோக்கி மூலம் இயற்கை அழகை காண சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். தொட்டபெட்டாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

The post தொலைநோக்கு கருவி மூலம் தொட்டபெட்டாவில் இயற்கை அழகை காண குவியும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Thottapeta ,Thottapetta ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ