×

உடல்நல குறைவால் உயிரிழந்த போண்டா மணி குடும்பத்திற்கு இஎன்எஸ் தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி

சென்னை: சென்னையில் உடல் நல குறைவால் உயிரிழந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணி குடும்பத்திற்கு இஎன்எஸ் தமிழ்நாடு மக்கள் சேவை இயக்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இயக்க நிறுவனர் சேகர் வழங்கினார்.

கீழ் கூடலூர் ஊராட்சி மன்ற தலைவரும், இஎன்எஸ் தமிழ்நாடு மக்கள் சேவை இயக்க நிறுவனமான சேகர் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இதேபோல் சமீபத்தில் சென்னை, மரக்காணத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதேபோல் திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணி சென்னையில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது குடும்பத்தினர் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், மிகவும் வறுமையில் இருப்பதையும் அறிந்த இஎன்எஸ் தமிழ்நாடு மக்கள் சேவை இயக்க நிறுவனர் சேகர், அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.

The post உடல்நல குறைவால் உயிரிழந்த போண்டா மணி குடும்பத்திற்கு இஎன்எஸ் தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : ENS ,Tamil Nadu People's Movement ,Bonda Mani ,Chennai ,Tamilnadu ,
× RELATED காமெடி நடிகர் போண்டா மணி காலமானார்