×

திருவாரூர் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் ரூ.1.67 கோடியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு

 

திருவாரூர், டிச. 27: திருவாரூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் 5 பள்ளி கட்டிடங்களை முதல்வர் மு. க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பெருங்குடி, கல்யாண மகாதேவி, தண்டலை, ஆமூர் மற்றும் ஓடாச்சேரி ஆகிய 5 ஊராட்சிகளில் தலா ரூ.33 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடங்களை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் முதல்வர் மு . க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து இந்த 5 பள்ளிகளிலும் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு தலைமையிலும், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா முன்னிலையிலும் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், புவனேஸ்வரி,ஒன்றிய பொறியாளர்கள் வேத விநாயகம், சிதம்பரம், ஒன்றிய குழுதுணைத் தலைவர் துரை தியாகராஜன், கவுன்சிலர்கள் தவுலத் இக்பால், முருகேசன், குணசேகரன்மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் ரூ.1.67 கோடியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Union ,Tiruvarur ,Chief Minister ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...