×

ஆலத்தூர் தாலுகாவில் 2 வகுப்பறை, 4 புதிய கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா

 

பாடாலூர், டிச. 27: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பிலிமிசை, திம்மூர், நாட்டார்மங்கலம், கண்ணப்பாடி ஆகிய கிராமத்தில் 2 வகுப்பறை 4 பள்ளி கட்டிடமும், புஜங்கராயநல்லுர் கிராமத்தில் ஒரு ஊராட்சி மன்ற அலுவலகமும் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.இரண்டாம் கட்டமாக மாநிலத்தின் 34 மாவட்டங்களில் 155.42 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பிலிமிசை, திம்மூர், நாட்டார்மங்கலம், கண்ணப்பாடி ஆகிய கிராமங்களிலும் தலா ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கூட கட்டிடத்தையும், புஜங்கராயநல்லுர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சம் 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவல கட்டிடத்தையும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இமயவரம்பன், பூங்கொடி, உதவி பொறியாளர் சதீஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துசாமி, ராஜகுமாரி அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசு, அலமேலு நாகராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், ஒப்பந்ததாரர்கள் பாலமுருகன், ராஜேந்திரன், விக்னேஷ், கிளைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அந்தந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆலத்தூர் தாலுகாவில் 2 வகுப்பறை, 4 புதிய கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Alatur taluk ,Badalur ,Perambalur district ,Alathur taluk Pilimisai ,Thimmur ,Natarmangalam ,Kannapadi village ,Alattur taluk ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு