×

சாலையை சேதப்படுத்திய ஆறு பேர் அதிரடி கைது

காரியாபட்டி, டிச.27: காரியாபட்டி அருகே சாலையை சேதப்படுத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.காரியாபட்டி ஒன்றியம் கள்ளங்குளத்திலிருந்து கொட்டங்குளம் செல்வதற்கு 2021-2022ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் தற்போது சாலை அமைக்கப்பட்டது.

மேலகள்ளங்குளம் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவி(48), மகாலிங்கம்(49), கடம்பவனம்(35), பரமேஸ்வரன்(38), கருப்புசாமி(26), கோபாலகிருஷ்ணன் என்ற சசி(22), கிருஷ்ணன்(60) ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.இது குறித்து காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா ஆவியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சீவி, மகாலிங்கம், கடம்பவனம், பரமேஸ்வரன், கருப்புசாமி, கோபாலகிருஷ்ணன் என்ற சசி ஆகியோரை கைது செய்தனர்.

The post சாலையை சேதப்படுத்திய ஆறு பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Kallangulam ,Kottangulam ,Dinakaran ,
× RELATED நான்குவழிச் சாலையில் சேதமடைந்து...