×

2 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்

சேலம், டிச. 27: சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் அடுத்த சின்னமாசமுத்திரம் தெற்கு ஏரிரோடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் (35). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு கவுதமி (23) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய் கனிஷ் என்ற 2 வயது குழந்தை உள்ளது. கடந்த 20ம் தேதி வேலைக்காக வெளியே சென்ற பெரியண்ணன், வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தார்.

அப்போது கவுதமி மற்றும் குழந்தை விஜய் கனிஷ் ஆகிய இருவரும் வீட்டில் இல்லை. தொடர்ந்து உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும், இருவரும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசில் பெரியண்ணன் புகார் அளித்தார். அதில், அதேபகுதியைச் சேர்ந்த ஒருவர் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

The post 2 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Periyannan ,Chinnamasamutram South Air Road ,Bethanaikkanpalayam, Salem district ,Mayam ,
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின