×

7 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஓசூர், டிச.27: ஓசூர் மாநகர ஆணையாளர் சினேகா உத்தரவின் பேரில், கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து நாள்தோறும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மத்திகிரி கூட்ரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது ஒரு சிப்ஸ் கடையில் 7 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களுக்கு கிலோவிற்கு ஆயிரம் வீதம் ₹7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் தொழில் உரிமம் பெறாமல் கடை நடத்தி வந்ததற்காக ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொழில் உரிமம் பெற விண்ணப்பிக்க தவறினால் நாளை இந்த கடையானது பூட்டி சீல் வைக்கப்படும். மாநகர எல்லைக்குள் தொழில் உரிமம் பெறாமல் கடை நடத்தி வருபவர்கள் உடனடியாக தொழில் உரிமம் பெற வேண்டும். தவறும்பட்சத்தில் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 7 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Municipal Commissioner ,Sneha ,Dinakaran ,
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது