×

அகஸ்தீஸ்வரத்தில் மாவட்ட அளவிலான களியல் போட்டி

தென்தாமரைக்குளம், டிச. 27: அகஸ்தீஸ்வரம் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடந்த களியல் போட்டியில் மயிலாடி அணி முதலிடம் பெற்றது. அகஸ்தீஸ்வரம் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மாவட்ட அளவிலான களியல் மற்றும் கோலாட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் களியல் போட்டியில் மயிலாடி அணி முதலிடம் பெற்றது. இரண்டாவது பரிசை ஆண்டார்குளம் அணியும், மூன்றாம் பரிசை பறக்கை அணியும் பெற்றன. கோலாட்டப் போட்டியில் சீயோன்புரம் அணி முதலிடம் பெற்றது. இரண்டாம் பரிசை புத்தளம் அணியும், மூன்றாம் பரிசை கனகப்பபுரம் அணியும் பெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை சபை போதகர் கிதியோன் மற்றும் சபைக்கமிட்டி, சபை மக்கள் செய்திருந்தனர்.

The post அகஸ்தீஸ்வரத்தில் மாவட்ட அளவிலான களியல் போட்டி appeared first on Dinakaran.

Tags : Agastheeswaram ,Tenthamaraikulam ,CSI ,Mayiladi ,Christmas ,Dinakaran ,
× RELATED தென்தாமரைக்குளம் வாக்குச்சாவடியில்...