×

9வது ஆண்டு சுனாமி நினைவு தினம்; மெரினா, பட்டினப்பாக்கம் காசிமேட்டில் மீனவர்கள் திரண்டனர்: உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி

சென்னை: சுனாமி தாக்கத்தின் 19ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு ஆகிய கடற்கரையில் உயிரிழந்தவர்களுக்கு மீனவர்கள், அரசியல் கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது சுனாமி பேரழிவு. இதில் தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்களின் உடமைகளை பறிகொடுத்தனர். இந்த நிகழ்வு நடந்து முடிந்து 18 வருடங்கள் நிறைவடைந்து, 19ம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி தங்கள் உறவுகளை இழந்த பலரும் நேற்று அந்தந்த கடற்கரை பகுதிக்கு சென்று உறவுகளை நினைத்து பூ தூவி, பால் தெளித்து அஞ்சலி செலுத்தினர். இதனால், நேற்று கடற்கரை பகுதிகள் சோகமயமாக காட்சியளித்தது.

சுனாமி தினத்தை துக்க நாளாக அறிவித்து மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவான்மியூர், திருவொற்றியூர், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ெசலுத்தினர். திமுக சார்பில் நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதியில் மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலு தலைமையில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பகுதி செயலாளர் எஸ்.முரளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ேதர்தல் அறிக்கை குழு உறுப்பினர் பீரவின் சக்கரவர்த்தி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டஸ், இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ரவீந்திரதாஸ், ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் அமிர்த வர்ஷினி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை மெரினா கடற்கரை நடுக்குப்பத்தில் தமிழக பாஜ மீனவர் அணி தலைவர் முனுசாமி தலைமையில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் துணை தலைவர் கருநாகராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், முன்னாள் மீனவர் அணி மாநில தலைவரும், மாநில செயலாளருமான எஸ்.சதீஷ் குமார், கராத்தே தியாகராஜன், மாநில ெசயலாளர் பிரேம்குமார், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்மோர் அஞ்சலி ெசலுத்தினர். கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் மரியாதை செலுத்தப்பட்டது. மீனவர் அணி மாநில ெசயலாளர் பிரேம்குமார் தலைமையில் 200 மீனவர்களுக்கு மீன் அன்னக்கூடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களும் மணற்பரப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சென்னையில் உள்ள கடற்கரை பகுதியில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தமிழகம் முழுவதும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

The post 9வது ஆண்டு சுனாமி நினைவு தினம்; மெரினா, பட்டினப்பாக்கம் காசிமேட்டில் மீனவர்கள் திரண்டனர்: உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : 9th Annual Tsunami Commemoration ,Kasimet, Marina, Pattinpakkam ,Chennai ,Tsunami ,Chennai Marina ,Pattinappakkam ,Kasimedu ,of ,Marina, Pattinappakkam ,Kasimet ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...