×

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை தரிசனத்துக்கு சேவை கட்டணம் உயர்வு

சென்னை: நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு, ஆஞ்சநேயர் 32 அடி உயரத்தில் அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு வடைமாலை தரிசனமும் சிறப்பு பெற்றது. இதற்கு சேவை கட்டணங்கள் உள்ளன. இந்நிலையில் வருகிற 1ம் தேதி முதல், சேவை கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பூர்ண வடை மாலைக்கான சேவை கட்டணம் ரூ.10,000ல் இருந்து ரூ.15,000 ஆகவும், சிறிய வடை மாலைக்கான சேவை கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.800 ஆகவும், தீப நெய் ரூ.10ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை பக்தர்கள் வருகிற 28ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

The post நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை தரிசனத்துக்கு சேவை கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Vadaimalai Darshan ,Nanganallur Anjaneyar Temple ,Chennai ,Anjaneya ,Temple ,Nanganallur ,Hanuman ,Vadaimalai ,Anjaneyar Temple ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...