×

தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: பீர்க்கன்காரணை இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தார்

தாம்பரம்: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் காலங்கரை கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை, மளிகை பொருட்கள், தண்ணீர் பாட்டில், பிரட், பிஸ்கட், நாப்கின், பெட்ஷீட், டவல் உள்ளிட்ட பொருட்களை பீர்க்கன்காரனை காவல்நிலைய ஆய்வாளர் நெடுமாறன் நேற்று அனுப்பி வைத்தார்.

The post தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: பீர்க்கன்காரணை இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Birkankarani Inspector ,Thoothukudi ,Thambaram ,Tirunelveli ,Birkankarani ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது