×

கேல் ரத்னா, அர்ஜுனா விருது திருப்பி தருகிறார் வினேஷ்

புது டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிரான பாலியல் புகார் சர்ச்சையில், முன்னணி வீரர், வீராங்கனைகள் திடீர் ஓய்வு முடிவு, பதக்கங்கள் மற்றும் விருதுகளை திருப்பிக்கொடுப்பது என பல வழிகளில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஒலிம்பியன் சாக்‌ஷி மாலிக் இனி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துவிட்ட நிலையில், பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக்கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில், மற்றொரு மல்யுத்த நட்சத்திரம் வினேஷ் போகத் தனது கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை திருப்பிக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளதுடன், இது குறித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் மற்றும் பயிற்சி முகாம் பற்றி அறிவிப்பதில் உரிய விதிமுறைகளை பின்பற்றாததால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

The post கேல் ரத்னா, அர்ஜுனா விருது திருப்பி தருகிறார் வினேஷ் appeared first on Dinakaran.

Tags : Vinesh ,New Delhi ,Gal Ratna ,
× RELATED ஆதார் தகவல்களை கையாள்வதற்கு ஒன்றிய...