×

செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ரூ.60 கோடி மதிப்புள்ள 75 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை விரைவாக மீட்க ஒன்றிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமணியில் ஒன்றிய அரசின் தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ரூ.60 கோடி மதிப்புள்ள 75 ஏக்கர் நிலத்தை பலர் ஆக்கிரமித்து அடுக்குமாடு வீடு உள்ளிட்ட கட்டிடங்களை கட்டியதாக புகார் அளித்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஒன்றிய அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி கங்காபுர்வாலா அமர்வு ஆணை பிறப்பித்துள்ளார்.

The post செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Leprosy Hospital ,Madurai ,High Court ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...